திருக்குறள்
நூல் குறிப்பு :
- திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல்
- குறள் ➝இரண்டடி வெண்பா
- திரு ➝சிறப்பு அடைமொழி
- குறள் 80 குறட்பாவை உணர்த்தாமல் அப்பாக்களால் ஆகிய நூலை உணர்ந்துவதால் ➝ ஆகுபெயர்
- திருக்குறள் ➝ அடையெடுத்த கருவியாகுபெயர்
- திருக்குறளின் முதல் பெயர்➝ முப்பால்
- இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
- திருக்குறள் 3 முப்பால் பிரிவுகளையும் 9 இயல்களையும் 133 அதிகாரங்களையும் கொண்டது
- அறத்துப்பால்➝38 அதிகாரங்கள்➝4 இயல்கள் பாயிரவியல் (4), இல்லறவியல் (20), துறவறவியல் (13), ஊழியல்(01)
- பொருட்பால்➝70 அதிகாரங்கள் ➝ 3 இயல்கள் அரசியல் (25), அமைச்சியல்(32), ஒழிபியல்(13)
- காமத்துப்பால்➝25அதிகாரங்கள்➝ 2இயல்கள் களவியல்(7), கற்பியல்(18)
இந்தப் பிரிவுகள் கூறுவன :
- தனிமனிதனது வாழ்வை கூறுவது --> அறத்துப்பால்
- சமுதாய வாழ்வை கூறுவது -->பொருட்பால்
- அக வாழ்வை கூறுவது--> இன்பத்துப்பால்
வேறு பெயர்கள் :
- உலகபொதுநூல்
- அறவிலக்கியம்
- தமிழர் திருமறை
- முப்பால்
- பொய்யாமொழி
- வாயுறைவாழ்த்து
- உத்தரவேதம்
- தெய்வநூல்
- திருவள்ளுவம்
- தமிழ்மறை
- பொதுமறை
- திருவள்ளுவ பயன் (நச்சினார்க்கினியர்)
- பொருளுரை (மணிமேகலை)
- முதுமொழி
- தமிழ் மாதின் இனிய உயர்நிலை (கவிமணி)
- நீதி இலக்கியத்தின் நந்தாவிளக்கு
- திருவள்ளுவ பயன் எனக் கூறியவர் -----நச்சினார்க்கினியார்
- தமிழ் மாதின் இனிய உயிர் நிலை ---கவிமணி
- தேவர் எனக் கூறியவர் ---நச்சினார்க்கினியர்
- தெய்வப்புலவர் என கூறியவர்-- இளம்பூரணார்
- பொருளுரையெனக் கூறியவர் ---சீத்தலைச் சாத்தனார் (மணிமேகலை)
- பொய்யில் புலவர் எனக் கூறியவர் --சீத்தலைச் சாத்தனார் (மணிமேகலை)
திருவள்ளுவரின் வேறு பெயர்கள் :
- நாயனார்
- தேவர்(நச்சினார்கினியர்)
- முதற்பாவலர்
- தெய்வப்புலவர் (இளம்பூரணார்)
- நான்முகனார்
- மாதானுபங்கி(தாய்க்கு நிகரானவர்)
- செந்நாப்போதார்
- பெருநாவலர்
- பொய்யில் புலவர் (மணிமேகலை)
- பொய்யாமொழிப் புலவர்
- வான்புகழ் வள்ளுவர்
- உரையாசிரியர்கள் :
- மணக்குடவர்
- பரிமேலழகர்
- பரிப்பெருமாள்
- திருமலையர்
- மல்லர்
- தருமர்
- காளிங்கர்
- தாமத்தர்
- பரிதி
- நச்சர்
- இவர்கள் திருக்குறளுக்கு முற்காலத்தில் உரை எழுதிய பதின்மர் ஆவர்
- சிறந்த உரை பரிமேலழகர் உடையது
- முதன் முதலில் உரையிட்டவர்--- மணக்குடவர்
- முதன் முதலில் அச்சிட்டவர்----- தஞ்சை ஞானப்பிரகாசர் (1812)
- உரை எழுதியவர்கள் காலத்தால் முந்தியவர் ----தருமர்
- காலத்தால் பிந்தியவர் ---பரிமேலழகர்
- மு.வ, நாமக்கல் கவிஞர், புலவர் குழந்தை ஆகியோரும் உரை எழுதியுள்ளனர்
- பரிமேலழகர் உரையுடன் முதல் முதலில் திருக்குறள் வெளியிட்டவர் ---ராமானுஜ கவிராயர்
- "தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர் பரிதி பரிமேலழகர் திருமலையர் மல்லர் பரிப்பெருமாள் காளிங்கர் வள்ளுவர் நூற்கு எல்லையுரை செய்தார் இவர்கள்" என்பது பழம்பாடல்