UNIT - 9


Material Sample page

அலகு-IX: தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்

(i) தமிழ்நாட்டின் மனிதவள மேம்பாட்டுக் குறியீடுகளும் அவற்றை தேசிய மற்றும் பிற மாநிலங்களுக்கான குறியீடுகளுடன் ஒப்பாய்வும்  -   தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு சமூக மறுமலர்ச்சி இயக்கங்களின் பங்களிப்பு.

(ii) அரசியல் கட்சிகளும் பலதரப்பு மக்களுக்கான நலத்திட்டங்களும்  - இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கான நியாயங்களும் சமூக வளங்களைப் பெறும் வாய்ப்புகளும்  - தமிழகத்தின் பொருளாதார போக்குகள்  - தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சியில் சமூகநலத் திட்டங்களின் தாக்கமும் பங்களிப்பும்.

(iii) சமூக நீதியும் சமூக நல்லிணக்கமும் சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள்.

(iv) தமிழகத்தின் கல்வி மற்றும் நலவாழ்வு (Health) முறைமைகள்

(v) தமிழகப் புவியியல் கூறுகளும் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும்.

(vi) பல்வேறு துறைகளில் தமிழகம் நிகழ்த்தியுள்ள சாதனைகள்.

(vii) தமிழகத்தில் மின்னாளுகை.

 


 

                                         

 

UNIT - 9

S. No:

பாடத்  தலைப்பு

Page No

(i)  தமிழ்நாட்டின் மனிதவள மேம்பாட்டுக் குறியீடுகளும் அவற்றை தேசிய மற்றும் பிற மாநிலங்களுக்கான குறியீடுகளுடன் ஒப்பாய்வும்  -   தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு சமூக மறுமலர்ச்சி இயக்கங்களின் பங்களிப்பு.

1

தமிழ்நாட்டின் மனிதவள மேம்பாட்டுக் குறியீடுகளும் அவற்றை தேசிய மற்றும் பிற மாநிலங்களுக்கான குறியீடுகளுடன் ஒப்பாய்வும்

4

2

தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு சமூக மறுமலர்ச்சி இயக்கங்களின் பங்களிப்பு.

10

(ii) அரசியல் கட்சிகளும் பலதரப்பு மக்களுக்கான நலத்திட்டங்களும்  - இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கான நியாயங்களும் சமூக வளங்களைப் பெறும் வாய்ப்புகளும்  - தமிழகத்தின் பொருளாதார போக்குகள்  - தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சியில் சமூகநலத் திட்டங்களின் தாக்கமும் பங்களிப்பும்.

3

அரசியல் கட்சிகளும் பலதரப்பு மக்களுக்கான நலத்திட்டங்களும் 

15

4

இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கான நியாயங்களும் சமூக வளங்களைப் பெறும் வாய்ப்புகளும் 

25

5

தமிழகத்தின் பொருளாதார போக்குகள்

37

6

தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சியில் சமூகநலத் திட்டங்களின் தாக்கமும் பங்களிப்பும்.

52

(iii) சமூக நீதியும் சமூக நல்லிணக்கமும் சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள்.

7

சமூக நீதியும் சமூக நல்லிணக்கமும் சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள்.

59

(iv) தமிழகத்தின் கல்வி மற்றும் நலவாழ்வு (Health) முறைமைகள்

8

தமிழகத்தின் கல்வி மற்றும் நலவாழ்வு (Health) முறைமைகள்

90

(v) தமிழகப் புவியியல் கூறுகளும் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும்.

9

தமிழகப் புவியியல் கூறுகளும் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும்.

165

(vi) பல்வேறு துறைகளில் தமிழகம் நிகழ்த்தியுள்ள சாதனைகள்.

10

பல்வேறு துறைகளில் தமிழகம் நிகழ்த்தியுள்ள சாதனைகள்.

221

(vii) தமிழகத்தில் மின்னாளுகை.

11

தமிழகத்தில் மின்னாளுகை.

233

 

 

UNIT – ix (i)

தமிழ்நாட்டின் மனிதவள மேம்பாட்டுக் குறியீடுகளும்

அவற்றை தேசிய மற்றும் பிற மாநிலங்களுக்கான குறியீடுகளுடன் ஒப்பாய்வும்  -   தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு சமூக மறுமலர்ச்சி இயக்கங்களின் பங்களிப்பு.

Ø  ஆசிரியர்கள் கதவைத் திறக்கிறார்கள், ஆனால்

நீங்கள்தான் உள்ளே செல்ல வேண்டும்.

                                                           


 

தமிழ்நாட்டின் மனிதவள மேம்பாட்டுக் குறியீடுகளும்

அவற்றை தேசிய மற்றும் பிற மாநிலங்களுக்கான குறியீடுகளுடன் ஒப்பாய்வும்

 

தமிழ்நாட்டின் வளர்ச்சி:

v  வறுமை, அடிப்படை வசதி, போன்றவற்றிலிருந்து மிக வேகமான வளர்ச்சியை மிக குறுகிய காலத்தில் தமிழ்நாடு பெற்றுள்ளது.

v  மதிய உணவு திட்டம், சுகாதார மையங்கள், சாலை வசதிகள், பொது போக்குவரத்து, குடிநீர்வசதி, மின்இணைப்பு, வழங்கல் போன்ற சமூக நலத்திட்டங்கள் துணிச்சலாக முன்னெடுத்து நடைமுறைபடுத்தியுள்ளது.

v  வளர்ச்சி பாதையை பொறுத்தவரை தமிழ்நாடு, கேரளா, இமாச்சலபிரதேசம் போன்ற மாநிலங்களில் ஒற்றுமை உள்ளது.

v  மனித திறன்களை பயன்படுத்திய தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் அதிகமாக உள்ளது என அமர்த்தியா சென் தனது An Uncertain Glory என்ற புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

 

Global Hunger Index

v  GHI குறியீட்டில் பங்களதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் தரவரிசை பட்டியலுக்கு பிறகு 2020 ம் ஆண்டு இந்தியா 94/107 இடத்தில் உள்ளது.

v  2019 ஆண்டில் 102/117 இடத்தில் இடம் பெற்றுள்ளது.

 

Ø  குறியீடுகள்

v ஊட்டச்சத்து குறைவு விகிதம்

v குழந்தைகளை தூக்கி ஏறிதல்

v நீண்டகால ஊட்டசத்து குறைபாட்டால் வளர்ச்சி குன்றிய நிலை

v குழந்தை இறப்பு விகிதம்

 

ஊட்ட சத்து:

v  2015-2016 ஆண்டில் 27% கிராமபுற பெண்களும், மற்றும் 16% நகர்புற பெண்களும் (15-49 வயதிற்கட்பட்டவர்கள்) ஊட்டசத்து குறைபாடு உடையவர்கள் அல்லது நீண்ட கால ஆற்றல் குறைபாடு உடையவர்கள் என தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டது.

v  இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் (15-49 வயது) 2015-16 ஆண்டில் இரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

v  கிராமபுற குழந்தைகளில் 60% மற்றும் நகர்புற குழந்தைகளில் 56% (6-59 மாதங்கள்) 2015- 16 ஆண்டில் இரத்தசோகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

v  இந்தியாவில் 20% குழந்தைகள் (6-59 மாதம்) எடை குறைவாக உள்ளனர்.

v  தேவையான அளவு சுகாதாரத்திற்கு நிதி ஒதுக்குதல், ஊட்டச்சத்து திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முற்றிலுமாக செலவழித்தல், மற்றும் ஊட்டசத்து குறைபாடு இல்லாத மாநிலம் என்ற நிலையை அடைதல் போன்றவை குறிக்கோளாக கொண்டிருக்கவேண்டும் என அமர்த்திய சென் குறிப்பிட்டுள்ளார். இதனை தமிழ்நாட்டில் மட்டுமே காண்கிறார்.

 

பல பரிமாண வறுமை குறியீடு (Multi-Dimensional Poverty Index) MPI

v  இக்குறியீட்டை ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு திட்டம் (UNDP) மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முனைவு (OPHDI) ஆகிய அமைப்புகளால் 2010 ஆண்டு தொடங்கப்பட்டது.

v  UNDP-United Nations Development Programme

v  OPHDI-Oxford Poverty and Human Development Initiative

v  உடல் நலம், கல்வி, வாழ்க்கை தரம், வருமானம் அதிகாரமளித்தல், பணியின் தரம், வன்முறையால் அச்சுறுத்தல் போன்றவை குறியீடுகள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

v  உலகிலேயே மிக அதிகமான ஏழை மக்களை பெற்று முதலிடத்தில் இந்தியா உள்ளது. இதில் 2015-16 ஆண்டு புள்ளி விபரப்படி 364 மில்லியன் ஏழை மக்களில் 156 மில்லியன் குழந்தைகளாகும்.

v  பழங்குடியினர் மக்களிடையே 2015-16 ஆண்டில் 50% பேர் ஏழைகளாகவே உள்ளனர். இது 2005-06 ஆண்டு கணக்கின்படி 80% ஏழைகளாக இருந்துள்ளனர்.

v  2015-16 ஆண்டில் வறுமையால் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட மிக ஏழ்மையான மாநிலமாக பீகார் உள்ளது.

v  இந்தியாவில் வறுமைக் கோடு அதிக உள்ள மாநிலங்கள் பீகார், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் 196 மில்லியன் மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளனர்.

v  வறுமைக்கோடு குறைவாக உள்ள மாநிலம் கேரளா

v  வறுமை ஒழப்புத்திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. மேலும் வறுமை ஒழிக்க பல கொள்கைகளையும், திட்டங்களையும் செயல்படுத்துகிறது.

 

 

உலக பசி பட்டியல் குறியீடு (World Hunger Index):

v  இந்தியாவில் 194 மில்லியன் மக்கள் தீவிர பசியால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் பசிபட்டியல் குறியீட்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

v  ஐ.நாவின் FAO இக்குறியீட்டை 2015 ஆண்டில் வெளியிட்டது.

v  FAO:Food Agricultural Ogranisation.

 

மொத்தநாட்டு மகிழ்ச்சி குறியீடு GNHI - Gross National Happiness Index

v  இக்கருத்தை முதலில் உருவாக்கியவர் பூடான் நாட்டின் 4-வது மன்னர் ஜிக்மே சிங்யே வாங்சு

v  ஜூலை -18, 2008 ஆண்டிலிருந்து பூடான் அரசின் முக்கிய குறிக்கோளாக அறிவித்து நாடைமுறைப்படுத்தியது.

v  2011 ஐ.நா. தனது உறுப்பு நாடுகளை பூடான் போன்று மக்களின் மகிழ்ச்சி குறியீடுகளை வெளியிடக்கூறியது.

v  அதன்படி உலகின் மகிழ்ச்சியான நாடு__பின்லாந்து (முதலிடம்)

v  கடைசியிடம் - ஆப்கானிஸ்தான்

v  இந்தியா- 139/149 நாடுகள் - 2021

குறியீடுகள்

v  நீடித்த, சமமான, சமூக பொருளாதார வளர்ச்சி

v  சுற்றுசூழல் பாதுகாப்பு

v  கலாச்சார மேம்பாடு

v  சிறந்த நிர்வாகம்

 

வாழ்க்கை தரம் குறியீட்டுடன் POLT-Physical Quality of Life Index.

v  PQLI குறியீட்டை உருவாக்கியவர் மோரிஸ் டி மோரிஸ்

குறியீடுகள்

v  எதிர்பார்ப்பு ஆயுட்காலம்

v  எழுத்தறிவு வீதம்

v  குழந்தை இறப்பு வீதம்

v  தரவரிசைகள் முதலிடம் உள்ள நாடு மோசமான செயல்பாடாகவும் 100 - வது இடம் பெற்றுள்ள நாடு சிறப்பான நாடு என குறியீடு வழங்கப்படுகிறது.

 

மனித வளர்ச்சி குறியீடு(Human Development Index):

v  1990 ஆண்டு ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டம் (UNDP) (United Nations Development Programme) என்ற அமைப்பு உலக நாடுகளின் மனிதவளர்ச்சி குறியீட்டை வெளியிட்டது.

v  HDI வெளியிடுபவர்களில் முன்னோடி - முகாப் உல் ஹக் (பாக்) மற்றும் அமர்த்தியா சென் (IND).

குறியீடுகள்:

A.   வாழ்க்கை தரம் -தலா வருமானம் உயர்வு

B.   சராசரி ஆயுள்

C.   கல்வி - பள்ளி சேர்க்கை விகிதம்.

v  மனித வளர்ச்சி குறியீட்டில் முதலிடம் உள்ள நாடு - நார்வே.

v  கடைசி இடம் - நைஜர்

v  2020 ஆண்டு இந்தியாவின் HDI குறியீடு 131/189 இடம்.

v  1960 ஆண்டு எஸ்கல்ட்ஸ் என்ற அறிஞர் மனித மூலதன கோட்பாட்டில் கல்வி பற்றிய பொருளியிலை உருவாக்கினார்.

v  கல்வி என்பது நுகர்வு பொருளாகவும், முதலீடும் கருதப்படுகிறது.

v  மனித வள மேம்பாட்டின் எளிய கூட்டு குறியீட்டு எண்ணை வடிவமைத்தவர் ஹர்பீசன் (Harbison) மற்றும் மேயர்ஸ் (Myers).

v  அனைத்து நாடுகளையும் 0 முதல் 1 வரை மூன்று வளர்ச்சி இலக்குகளை அடிப்படையாக கொண்டு வரிசைப்படுத்துகிறது.

1. குறைந்த மனித மேம்பாடு 0 to 0.49

2. நடுத்தர மனித மேம்பாடு 0.5 to 0.79

3. உயர்தர மனித மேம்பாடு 0.8 to 1.0

v  இதில் இந்தியா நடுத்தர மனித மேம்பாட்டின் பிரிவின் கீழ் இடம் பெறுகிறது.

v  HDI-1, HDI-2, HDI -3, HDI-4 என 4 வகையான மனித மேம்பாட்டு குறியீடுகளை பிஸ்வஜித்குஹா  வகைபடுத்தியுள்ளார். மேலும் வாழ்க்கைதரம், வறுமை ஒழிப்பு, மற்றும் நகர்மயமாதல் போன்ற பரிமாணங்களை சேர்த்துள்ளார்.

v  இந்தியாவில் 2001 ஆண்டு முதல் திட்ட குழு மனித வள மேம்பாட்டு குறியீட்டை வெளியிடுகிறது.

v  HDI குறியீட்டில் முதலிடம் பெற்ற மாநிலம் - கேரளா.

v  தமிழ்நாடு 3 வது இடத்தில் உள்ளது.

v  மிக குறைந்த HDI குறியீடு உள்ள மாநிலம் - பீகார்.

v  தமிழ்நாட்டில் கன்னியாகுமாரி முதலிடத்தில் உள்ளது.

v  அரியலூர் கடைசி இடத்தில் உள்ளது.

 

பாலின வளர்ச்சி குறியீடு (Gender Related Development Index):

v  மனித மேம்பாட்டு குறியீட்டை கொண்டு ஆனர், பெண்களுக்கிடையே உள்ள ஏற்றதாழ்வுகளை பிரதிபலிக்கிறது.

1. பெண்ணின் எதிர்பார்க்கப்பட்ட வாழ்வு காலம்

2. பெண்ணின் வயது கல்விநிலை

3. பெண்ணின் தலா வருமானம்

 

மனித ஏழ்மை குறியீடு (Human Poverty Index):

v  1997 ஆண்டில் மனிதவள மேம்பாடு குறியீடு மனித ஏழ்மை குறியீட்டை அறிமுகபடுத்தியது.

v  2001 ஆண்டு முதல் இந்திய திட்ட குழு நாட்டின் மனித மேம்பாட்டு அறிக்கை வெளியிட்டது.

 

பலபரிமான வறுமை குறியீடு 2018 / TN

v  ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு திட்டம் (UNDP) மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முனைவு (OPHI) ஆகியவை இணைந்து 2010 ஆண்டு தொடங்கப்பட்டது.

1. உயர் வறுமையுள்ள மாவட்டங்கள் -40% மேல்.

2. மிதமான வறமையுள்ள மாவட்டங்கள் -30% முதல் 40% வரை

3. குறைந்த வறுமையுள்ள மாவட்டங்கள்- 30% கீழ்.

v  2005 ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் பல மாநிலங்களை விட வறுமை குறைப்பு தமிழ்நாட்டில் வேகமாக உள்ளது.

v  வறுமை குறைவாக உள்ள மாவட்டம் முதலிடம் –

காஞ்சிபுரம் -1

சென்னை-2,

கடலூர் -3.

v  வறுமை அதிகமுள்ள மாவட்டம் கடைசியிடம் - தர்மபுரி -32, பெரம்பலூர் -31,இராமநாதபுரம் - 30.


ஊட்டசத்து மற்றும் சுகாதார நிலை:

v  ஏராளமான இந்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் எடை குறைவாகவும் இரத்தசோகை மற்றும் நுண்ணூட்ட சத்து குறைபாடுகளினாலும் பாதிக்கப்படுகின்றனர்.

v  ஒருகிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (Integrated Child Development Services) மதிய உணவு திட்டம் (Mid day Meal Scheme) இனப்பெருக்க மற்றும் குழந்தைகள் சுகாதார திட்டங்கள் (Reproductive and Child Health Programme) மற்றும் தேசிய கிராமபுற சுகாதார பணி (National Rural Health Mission) போன்ற ஊட்ட சத்து மற்றும் சுகாதார திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

v  ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப்பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் இளம் பெண்கள் ஆகியோரின் உடல்நலம் மற்றும் ஊட்டசத்து நிலைகளில் குறிப்பிட்டதக்க மாற்றங்களை ஏற்படுத்தியதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் வரவு செலவு திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கியுள்ளது.

v  ICDS திட்டம் மற்றும் புரட்சி தலைவர் MGR சத்துணவு திட்டம் ஆகிய செயல்பாட்டின் மூலம் "ஒரு ஊட்டசத்து குறைபாடு இல்லாத தமிழ்நாடு" உருவாக்க திட்டமிடப்பட்டது.

v  தமிழ்நாட்டில் 434 குழந்தைகள் மேம்பாட்டுத் தொகுதிகளில் 54439 குழந்தை மையங்கள் மூலம் ICDS செயல்படுத்தப்படுகிறது.

v  ICDS திட்டம் உலகின் மிகப்பெரிய குழந்தைகள் மேம்பாட்டு திட்டமாகும்.

v  புரட்சி தலைவர் MGR மதிய உணவு திட்டம் தான் இந்தியாவில் மிகப்பெரிய மதிய உணவு திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குவதற்கும் தொடக்கப்பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பதற்கும், மாணவர்களின் இடைநிற்றல் விகிதத்தை குறைப்பதற்கும் உதவுகிறது.

v  பெண்குழந்தைகளை மேம்படுத்துவதற்கும், அதிகாரமளிக்கவும், பதுமையர் குழு ஏற்படுத்தப்பட்டு பதுமையர் அட்டை வழங்கப்படுகிறது.

 

 

 

தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு

சமூக மறுமலர்ச்சி இயக்கங்களின் பங்களிப்பு.

1. ராமலிங்க ஸ்வாமிகள்: 1823-1874

v  இவரை வள்ளலார் என அழைக்கப்படுவார். 1865 ஆண்டு சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை தோற்றுவித்தார். மத ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கம் போன்றவை இதன் முக்கிய குறிக்கோளாகும்.

v  1865 சத்திய தரும சாலை தொடங்கி அனைவருக்கும் உணவு வழங்கப்படுகிறது.

v  1872 சத்திய ஞான சபை தொடங்கினார்.

 

2.  வைகுண்ட ஸ்வாமிகள் : 1809-1851

v  1809 ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தார்.

v  திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள ஜாதி வேறுபாட்டை நீக்க பாடுபட்டார். அதற்காக "சமத்துவ சமாஜம" என்ற அமைப்பை ஏற்படுத்தி ஜாதி வேறுபாடு இல்லாமல் மக்களை ஒருங்கிணைத்தார். இவரை பின்பற்றுபவர்களை அய்யாவழி என அழைக்கப்பட்டனர்.

 

3.  ரெட்டைமலை ஸ்ரீனிவாசன்: 1859-1945

v  1859 ஆண்டு காஞ்சிபுரத்தில் பிறந்தார் இவரை தாத்தா (Grandpa) என அழைக்கப்பட்டார்.

v  1893 ஆண்டு ஆதிதிராவிட மகாஜன சபாவை ஏற்படுத்தி தாழ்த்தப்பட்டவர்களின் உயர்வுக்காக பாடுபட்டார். தலித்களுக்கு இலவச கல்வி வழங்க போராடினார்.

v  நீதிகட்சி ஆட்சியின் போது தலித்துகள் பொது பாதையில் நடக்கவும் பொது கிணற்றில் நீர் எடுக்கவும் சட்ட சபையில் 1924 ஆண்டு தீர்மானத்தை நிறை வேற்றினார்.

 

4. அயோத்திதாஸ் பண்டிதர்: 1845-1914

v  1845 ஆண்டு பிறந்தார் 1876 இல் அத்வைதானந்தா சபாவை ஏற்படுத்தி நீலகிரி மலை வாழ் மக்களை ஒருகிணைத்தார்.

v  1907 ஆண்டு முதல் ஒரு பைசா தமிழன் என்ற வார இதழை வெளியிட்டார்.


5. ஈ.வே.ராமசாமி : 1879-1973

v  1879 ஆண்டு ஈரோட்டில் பிறந்தார்.

v  1921 ஆண்டு மது ஒழிப்பு போராட்டத்தை முன்னின்று நடத்தினார்.

v  1924 வைக்கம் போராட்டத்தை முன்னெடுத்து தாழ்த்தப்பட்ட மக்களுடன் ஆலய பிரவேசம் செய்தார். அதனால் வைக்கம் வீரர் என அழைக்கப்பட்டார்.

v  1925 சுய மரியாதை இயக்கத்தை தொடங்கினார். செங்கல்பட்டு நகரில் 1929 ஆண்டு முதல் மாநாட்டை நடத்தினார்.

v  1938 ஆண்டு மெட்ராஸில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் தர்மாம்பாள் அம்மையார் ஈ.வே.ரா. விற்கு பெரியார் பட்டம் வழங்கினார்.

v  1944 ஆண்டு சேலத்தில் நடைப்பெற்ற நீதி கட்சி மாநாட்டில் நீதி கட்சியின் தலைவராக பொறுப்பு ஏற்றபின் நீதி கட்சியை திராவிட கட்சி என பெயர் மாற்றம் செய்தார்.

v  குடியரசு (1925), புரட்சி (1928), பகுத்தறிவு (1934), விடுதலை (1935) ஆகிய தமிழ் பத்திரிக்கையும் Revolt (1928) என்ற ஆங்கில பத்திரிக்கையும் வெளியிட்டார்.

v  சுயமரியாதை இயக்கத்தின் மூலம் ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, குழந்தை திருமணம், விதவை மறுமணம் போன்றவற்றிற்கு எதிராக போராடினார். கலப்பு திருமணத்தை ஆதரித்தார்.

v  1970 ஜீன் 27 அன்று தெற்காசியாவின் சாக்கரடிஸ் என யுனெஸ்கோ பட்டம் வழங்கியது.

 

6. சுப்ரமணிய பாரதி : 1882-1921

v  ஆண் மற்றும் பெண் என்ற இரண்டு ஜாதிகள் மட்டுமே இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். குழந்தை மணம், வரதட்சினைக்கு எதிராக போராடினார்.

 

7. அன்னிபெசன்ட் : 1847-1933

v  1889 ஆண்டு தியோசிபிக்கல் சொசைட்டில் இணைந்தார்.

v  1916 ஆண்டு தன்னாட்சி அமைப்பு தொடங்கினார். பெண்கள் மேம்பாட்டிற்கு பாடுபட்டார். நியூஇந்தியா (1915) மற்றும் காமன்வீல் (1914) போன்ற பத்திரிக்கைகள் தொடங்கினார்.

v  பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தார்.

 

8 . முத்துலட்சுமி ரெட்டி : 1886-1968

v  1886 ஆண்டு புதுகோட்டையில் பிறந்தார்.

v  இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் (1912) ஆவார்.

v  1918 ஆண்டு இந்தியா பெண்கள் அமைப்பை தொடங்குவதற்கு உறுதுணையாக இருந்தார்.

v  பூனோவில் அனைத்து இந்தியா பெண்கள் மாநாட்டை நடத்தினார்.

v  சென்னை சாந்தோமில் அனாதை பெண்களுக்காக அவ்வை இல்லத்தை தொடங்கினார்.

v  1947 ஆண்டு தேவதாசி ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்ற பாடுபட்டார்.

v  1956 ஆண்டு அடையாரில் புற்றுநோய் நிறுவனத்தை ஏற்படுத்தினார்.

 

9. தர்மாம்பாள் அம்மையார்: 1890-1959

v  1940 ஆண்டு தமிழ் ஆசிரியர்கள் அவலநிலையை எடுத்துரைக்க இழவு வாரம போராட்டத்தை நடத்தினார்.

v  வீர தமிழன்னை என இவருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

 

10. மூவாலூர் இராமாமிர்தம்:

v  தேவதாசி ஒழிப்பிற்காக பாடுபட்டார். இவரது முயற்சியால் முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அவரது நினைவாக தமிழக அரசு திருமண உதவி திட்டம் அறிவித்துள்ளது.

 

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி

v  தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக தேசிய சராசரியை விட அதிகப் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை தமிழகம் அடைந்து வருகிறது.

v  கடந்த ஆண்டின் அகில இந்திய சராசரி விகிதமான 4.2% என்ற விகிதத்திற்கு எதிராக, நமது மாநிலத்தின் செயல்திறன் (8.03%) கிட்டத்தட்ட இரு மடங்காக உள்ளது.

v  2011-12 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாக வைத்து, நிலையான விலையில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தித் தரவுகளின் கணக்கீடானது செய்யப் பட்டு உள்ளது.

v  2019-20 ஆம் ஆண்டில் தனிநபர் வருமானத்தைப் பொருத்தவரை (நிகர மாநில உள்நாட்டு உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு), தமிழ்நாட்டில் இது ரூபாய் 1,53,853 ஆகும். அகில இந்திய அளவில் இது ஆறாவது இடமாகும்.

v  2018-19 ஆம் ஆண்டில், இது ரூபாய் 1,42,941 ஆக இருந்தது. அதாவது இந்திய அளவில் இது 12வது இடத்தில் இருந்தது.

v  மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பைப் பொருத்தவரை, மாநிலத்தின் தரவரிசையில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.

v  2019-20 ஆம் ஆண்டில், இது முதல் இடத்திற்குச் சென்றது, இதற்குக் காரணம் மேற்கு மாநிலமான மகாராஷ்டிராவின் தரவுகள் கிட்டாததாக இருக்கலாம்.

v  2019-20 ஆண்டிற்கான முன்கூட்டியே மதிப்பீடுகளின்படி, முதன்மைத் துறையின் வளர்ச்சி விகிதம் 6.08% ஆகவும், சேவைத் துறையின் வளர்ச்சி விகிதம் 6.63% ஆகவும் உள்ளது.

v  இரண்டாம் நிலைத் துறையானது இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது (10.02%).

v  இரண்டாம் நிலைத் துறையில், உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறைகள் முறையே 10.27% மற்றும் 10.49% என்ற இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தைக் கொண்டு உள்ளன.

v  முதன்மைத் துறையினுள் கூட, விவசாயப் பிரிவு 2018-19 ஆம் ஆண்டில் 5.8% ஆக இருந்த வளர்ச்சியை விட இந்த முறை அதிக வளர்ச்சி விகிதத்தை (7.43%) பதிவு செய்து உள்ளது.

v  முதன்மை நிலை, இரண்டாம் நிலை மற்றும் சேவைத் துறைகளுக்கான முந்தைய ஆண்டின் புள்ளி விவரங்கள் முறையே 8.49%, 6.49% மற்றும் 7.83% ஆகும்.

 

 

புதியது பழையவை